தமிழ்நாட்டின் கவர்னராக இதுவரை பதவி வகித்து வந்த திரு பன்வாரி லால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது நாகலாந்து கவர்னராக இருக்கும் ஆர்.என் ரவி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அதே போல் எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி திரு .கே பழனிச்சாமியும் வரவேற்றுள்ளார்.
கவர்னராக பொறுப்பேற்கும் திரு ஆர்.என் ரவி கேரளாவில் காவல்துறை உயரதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் பணியாற்றியவர். இவர் இரு ஐபிஎஸ் அதிகாரியும் ஆவார்.