விவேக் படித்த கல்லூரியில் அவருக்கு அஞ்சலி

விவேக் படித்த கல்லூரியில் அவருக்கு அஞ்சலி

மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரி உள்ளது மதுரை பக்கம் இருந்து படித்து விட்டு சினிமாவுக்கு வருபவர்கள் இந்த கல்லூரியை மிதிக்காமல் வந்திருக்க மாட்டார்கள். மதுரையின் பிரதான கலைக்கல்லூரியான இதில்தான் சாலமன் பாப்பையா பேராசிரியராக பணியாற்றியபோது நடிகர் விவேக்கும் இங்கு படித்தார்.

நடிகர் விவேக் மறைவை அடுத்து அவர் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று பேராசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவேக்கின் கல்லூரி நண்பர்கள், அவருடைய கல்லூரி கலைநிகழ்ச்சிகள் எப்படி திரைப்பயணத்துக்கு வித்திட்டது என்பது குறித்து சிலாகித்துப் பேசினர்.