cinema news
விவேக் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் அதிசயம்
நேற்று முன் தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக், திடீரென்று நேற்று மாரடைப்பால் காலமானார் அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
விவேக் இறப்பில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவர் 1961 பிலவ ஆண்டில் நவம்பர் 19ல் பிறந்திருக்கிறார் மீண்டும் 60 வருடங்கள் கழித்து வந்த அதே பிலவ ஆண்டிலேயே மறைந்து விட்டார்.
இது போல அறிஞர் அண்ணாதுரை அவர்களையும் கூறுவதுண்டு செளமிய ஆண்டில் பிறந்து செளமிய ஆண்டில் மறைந்தார் என்று அது போலவே பிலவ தமிழ் ஆண்டில் பிறந்து 60 வருடம் கழித்து மீண்டும் வந்த பிலவ ஆண்டிலேயே விவேக் மறைந்துவிட்டார்.