Tamil Flash News

திருப்பதி லட்டு விவகாரம்… சிறப்பு விசாரணை குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!

Published on

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் சுத்தமானது இல்லை எனவும், அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி மீது குற்றம் சுமத்தி இருந்தார்கள்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதில் சிபிஐயில் இருந்து 2 அதிகாரிகள் இருப்பார்கள். ஆந்திர பிரதேச மாநில காவல்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் FSSAI-லிருந்து மூத்த அதிகாரி ஒருவர் இருப்பார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது இந்த விவகாரத்தை அரசியல் களத்திற்கான பயன்பாட்டாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது அதனை நாங்கள் விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது மேலும் எஸ் டி ஐ விசாரணையை மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலர் மேற்பார்வையிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version