நிரோத் உபயோகியுங்க- நடிகர் பார்த்திபன் கண்ணீர்

நிரோத் உபயோகியுங்க- நடிகர் பார்த்திபன் கண்ணீர்

நிரோத் என்பது ஒரு கருத்தடை சாதனமாகும். நிரோத் உபயோகிங்க என்று ஒரு வசனம் பார்த்திபன் நடித்த புதிய பாதை படத்தில் வரும்.

இந்த வசனத்தை ஒரு நிகழ்வுக்காக பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். பச்சை குழந்தை ஒன்றை அனாதையாக யாரோ விட்டு சென்றுள்ளனர். அது துணிகள் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது எங்கு நடந்த சம்பவம் என தெரியவில்லை. அந்த வீடியோவை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,நிரோத் உபயோகியுங்கள், நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு என பார்த்திபன் கூறியுள்ளார்.