கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்

கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்

கன்னடத்தில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர் வரிசையில் இருந்தவர் சிரஞ்சீவி சார்ஜா. முன்னணி நடிகரான இவர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் பிரமிளா. இவரின் மகள் தான் நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், ஜக்கம்மா, உயர்திரு420 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் கன்னடத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

மேக்னா ராஜ் கர்ப்பமான காலக்கட்டத்தில் அவரை கவனித்துக்கொண்ட சிரஞ்சீவி சார்ஜா இறந்தது கன்னட திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் மேக்னா ராஜ் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். கணவர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு பதில் அவரது ஆளுயர கட் அவுட்டை பக்கத்தில் வைத்து அவர் அருகில் நிற்பது போல தனது வளைகாப்பை நடத்தி இருக்கிறார் மேக்னா ராஜ்.