தமிழகத்தில் 75 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை கிடுகிடுவென ஏறி கடந்த ஒரு வருடத்திற்குள் 100யை கடந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் 103 ரூபாய் பெட்ரோல் விற்ற நிலையில் தமிழகத்தில் அதன் வரியை 3 ரூபாய் குறைத்து 100 ரூபாய் ஆக தமிழக நிதி அமைச்சர் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் விலை ஏறி வரும் நிலையில் தமிழகத்தில் அதன் வரியை முதல்வர் 35 ரூபாய் குறைத்து ரூபாய் 65 ஆக ஆக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் வதந்தி பரவியது.
இந்த நிலையில் இதை கேள்விப்பட்ட தமிழக பார்டரை ஒட்டியுள்ள கேரள மக்கள் தமிழகத்தில் குவிந்தனர்.
குறிப்பாக தேனி மாவட்டத்தின் போடி, கம்பம் பகுதிகளுக்கு கேரள மாநில மக்கள் பலர் பெட்ரோல் பல்க்குகளில் குவிந்தனர்.
கடைசியில் இது தவறான தகவல் என்பதை உணர்ந்து திரும்பி சென்றனர்.

