cinema news
கலைஞர் டிவியும் ஓடிடி யில் இறங்கியது
தற்போது முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கென்று பிரத்யேக ஓடிடி தளங்கள் வைத்துள்ளன. தங்களுடைய நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் என அனைத்தையும் ஓடிடியில் வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கலைஞர் டிவியும் ஓடிடியில் களம் காணவுள்ளது. தங்களுடைய நிகழ்ச்சிகள், தொடர்கள் ஆகியவற்றை வெளியிட ஓடிடி தளம் ஒன்றை வடிவமைத்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், பல்வேறு புதிய படங்களின் உரிமைகளையும் கைப்பற்றி வருகிறது.
சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’, விரைவில் வெளியாகவுள்ள ‘அரண்மனை 3’ ஆகிய படங்களின் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.