இன்று மருத்துவ தேர்வான நீட் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

