கமல்ஹாசன் தனது ரசிகர் மன்றத்தை பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றிவிட்டார் இது எதனால் நடந்தது தெரியுமா.
சில வருடங்கள் முன் நடந்த ஒரு விருது விழாவில் கமல் இதைப்பற்றி கூறியுள்ளார்.
ஒரு சமயம் ஒரு படத்தின் வெற்றி விழாவுக்காக பாண்டிச்சேரியில் தீபம் ஏந்தி ஓடிவந்த இரு ரசிகர்கள் சென்னை வந்து என்னை பார்த்தனர். ஒரு படத்தின் வெற்றி விழாவுக்காக இப்படி எல்லாம் ஓடி வர வேண்டுமா என நினைத்தேன்.
அவர்களை தனியாக கூப்பிட்டு ஏம்பா நான் ஒரு தனியாள் . திரையில் உங்களுக்கு பார்ப்பதற்கு பூதாகரமாக தெரியலாம் அதற்காக இவ்வளவு சிரமம் எல்லாம் படாதீர்கள் என்றேன். உடனே அவர் அண்ணே உங்களை ரசிக்கிறது எங்க விருப்பம் உங்களுக்காக என்ன வேணாலும் செய்வோம் இதை செய்யக்கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது என்றார். அவர் அண்ணன் என்று சொல்லிய வார்த்தைகள் எனக்கு பிடித்தது அதனால் எந்த தம்பியும் நமக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ரசிகர் மன்றம் சார்ந்து எனக்காக செய்யும் இது போல செயல்களை தவிர்த்து ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றி செயல்படுங்கள் என்றேன் என தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியதற்கு காரணம் என கூறியுள்ளார்.

