viral video

என்ன ஒரு குரல்…! ‘கண்ணான கண்ணே’ பாடிய வாலிபர் – வாய்ப்பு கொடுப்பாரா டி.இமான்?

டி.இமான் இசையில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பாடலை கண் பார்வையில்லாத ஒருவர் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

D.Imman give chance to blind singer viral video – இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் விடுமுறையில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பலரையும் உருக வைத்தது. இப்பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியிருந்தார்.

viswasam

இந்நிலையில், கண்பார்வையில்லாத ஒருவர் இப்பாடலை பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இசையமைப்பாளர் டி.இமானுக்கு டேக் செய்திருந்தார்.

இதைக்கண்ட இமான் பாடும் நபரின் தொலைப்பேசி எண்களை கேட்டார். அதன்பின் இந்த வீடியோ எடுத்தவரின் தொலைப்பேசி எண்களை கொடுத்தார். டி.இமான் அவரை பாட வைப்பாரா என்பது விரைவில் நமக்கு தெரிய வரும்.