முதலமைச்சர் தாய் பற்றி அவதூறு- மன்னிப்பு கோரினார் ஆ ராசா

முதலமைச்சர் தாய் பற்றி அவதூறு- மன்னிப்பு கோரினார் ஆ ராசா

முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான ஆ.ராசா சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பற்றி பேசும்போது கள்ள உறவுக்கு பிறந்தவர் என கூறி இருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. ராஜாவின் புகைப்படத்தை வைத்து மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படி வேகமாக போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால் அது வர இருக்கும் தேர்தலில் எதிரொலித்து திமுகவுக்கு எதிராக நடக்க வாய்ப்பு இருக்கும் நிலை உருவானது.

இந்நிலையில் இது குறித்து ஆ. ராசா மன்னிப்பு கோரியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் கண்கலங்கியது வருத்தமளித்தது நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என ஆ.ராசா கூறியுள்ளார்.