பிங்க் தெலுங்கு ரீமேக் – ஒரிஜினல் பட காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதா

பிங்க் தெலுங்கு ரீமேக் – ஒரிஜினல் பட காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதா

பவன் கல்யாண் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் வர இருக்கும் திரைப்படம் வக்கீல் சாப். இந்த படத்தில் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் பலரானோர் நடிக்கின்றனர்.

இப்படம் ஹிந்தியில் சில வருடங்கள் முன் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் . தமிழில் அஜீத் நடிக்க பிங்க் ஆக வந்து விட்டது.

இந்த நிலையில் தமிழ், ஹிந்தியில் இல்லாத அளவுக்கு சில இடங்களில் பவன் கல்யானுக்கு சண்டைக்காட்சி வைத்துள்ளதாகவும், அவர் பெரிய ஹீரோ என்பதால் இது போல சண்டைக்காட்சி வைத்தால் படத்தின் ஆன்மாவை கெடுக்கும் என கூறப்பட்டது.

இது குறித்து கூறியுள்ள இப்பட தயாரிப்பாளர்

பவன் கல்யாண் ரசிகர்களுக்குத் தேவையானதை தெலுங்கு ரீமேக்கில் கொடுத்தாக வேண்டும். அவருக்கு 3 வருடங்கள் கழித்து வெளியாகும் படம் இது. அசல் கதையின் ஆன்மாவைக் கெடுக்காமல் நாங்கள் வணிகரீதியான விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம்.

தமிழில் வித்யாபாலன் நடித்ததைப் போல தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இவர்கள் திரையில் பல வெற்றிகளைப் பார்த்த ஜோடி. தெலுங்குப் பதிப்பில் இரண்டு சண்டைக் காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்கென வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தின் கரு ‘பெண்கள் இல்லை என்று சொன்னால் இல்லைதான்’ என்பதைப் பற்றியே இருக்கும்” என்று போனி கபூர் கூறியுள்ளார்.