cinema news

அவர் அப்படி செஞ்சதால என்னால அத அடக்கவே முடியல!…லட்சுமியை சிதறவிட்ட தேங்காய் சீனிவாசன்…

Published on

ஒரு காலத்தில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. கதாநாயகியாக நடிக்கத்துவங்கியதும் கவர்ச்சி காட்ட வேண்டிய வேடங்களாக இருந்தாலும் சரி, குடும்பபாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசால்ட்டாக டீல் பண்ணியவர் இவர்.

 

விசுவின் “சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் மூத்த மருமகளாக வந்திருந்த இவரின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அந்தந்த காட்சிகளை சரியான பாதையில் கொண்டு செல்லும் விதமான வசனங்கள் படத்தினை வேறு மாதிரியான மெஹா ஹிட் ஆக்கியது.

kasethan kadavulada

“காசேதான் கடவுளடா” படத்தில் நடித்திருக்கிறார் லட்சுமி அந்தப் படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். போலி சாமியார் என்பது   படத்தின் இறுதியிலேயே கண்டுபிடிக்கும்  அளவிற்கு கச்சிதமாக தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு நடித்திருப்பார்.

அந்த இறுதிக்காட்சியில் படமாக்கப்படும் பொழுது மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது தான் சிடிவேஷனாம். அந்த நேரத்தில் அவர் அந்த படத்தில் நடித்த நடிகர்களின் பெயர்கள் நடிகர்களின் பெயர்கள் அனைத்தையும் சொல்லிய லட்சுமி முத்துராமன் மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி என்பதனை மந்திரம் போல சொல்லத்துவங்கினாராம் தேங்காய் சீனிவாசன்.

பக்கத்தில் இருந்து இதை கேட்ட லட்சுமிக்கு குபீரென சிரிப்பு வந்துவிட்டதாம். அதோடு மட்டுமல்லாமல் லட்சுமி சிரிக்க துவங்கியதும் அருகில் இருந்த அனைவரும்  சிரித்து விட்டார்களாம்.

மனோரமா மட்டும் வாயை மூடிக்கொண்டு இறுக்கமாக இருந்தாராம்.  பின்னர் இறுதியில் அவரும் சிரித்து விட்டாராம். தேங்காய் சீனிவாசனின் அந்த நகைச்சுவை மிக்க செயலை கண்டு தன்னால் சிரிப்ப அடக்க முடியாமல் தவித்தாராம் அதே போல அந்த காட்சியை படமாக்க 17 டேக் வரை எடுத்து கொண்டதை  லட்சுமி  ஒரு முறை சொல்லி இருக்கிறார்

Trending

Exit mobile version