Latest News
முடிந்தது ஆஞ்சியோ சிகிச்சை… ஐசியூ-வில் நடிகர் ரஜினிகாந்த்… உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்…!
ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐசியூ-வில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு திடீரென்று நேற்று இரவு உடல் நல குறைபாடு ஏற்பட்ட காரணத்தால் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீரான ரத்த ஓட்டம், வயிற்று வலி, செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்டார் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டதால் அவருக்கு அதிநவீன ஆஞ்சியோ தெரபி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை முடிந்ததாகவும் ,தற்போது ஐசியூவில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.
அடுத்த 24 மணி நேரம் ஐசியூவில் இருப்பார் என்றும் அதன் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவரை மருத்துவமனை சார்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் நடிகர் ரஜினியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.