---Advertisement---

என்னது இதெல்லாம் இவர் பாடிய பாடல்களா?…நம்பவே முடியலையே அதிர்ச்சி கொடுத்த அருள்மொழி!…

Published on: April 18, 2024
arulmoli
---Advertisement---

இளையராஜாவின் இசை குழுவில் இடம் பெற்றிருப்பவர்  அருள்மொழி. புல்லாங்குழல் இசையமைப்பதில் வல்லவர் இவர், தனது திறமையால் இளையராஜாவின் இசைக்கு கூடுதல் சுவை சேர்த்திருப்பார். இளையராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் இவரும் ஒருவர்.

arulmozi
arulmozi

“சத்யா” திரைப்படத்தில் வரும் ‘வளையோசை கலகலவென’ பாடலில்  புல்லாங்குழல் இசைத்தவிதத்தை மேடையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னர் இசைக்க சொல்லி நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார் இளையராஜா.  முதலில் வேறு விதமாக இசைக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்டது. அதுவே பாடல் காட்சியில் இடம் பெற்றது.

‘புல்லாங்குழல்’ கலைஞராகவே மட்டும் அறியப்பட்ட அருள்மொழி பாடல் பாடுவதிலும் வல்லவர். வேறு பாடகர்கள் பாடிய பாடல் இது என நினைத்துக் கொண்டிக்கும் ‘ஹிட்’ பாடல்கள் பலவற்றை பாடியவர் இவர் தான் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

பிரபு நடித்த “திருநெல்வேலி” படத்தில் வரும் ‘ஏழா அழகம்மா என்ன பாத்தா எழப்பமா’ பாடல் இவர் பாடியது. இதைப்போல சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த ‘சூப்பர் ஹிட்’ படமான “சூரியவம்சம்” த்தில் வரும் ‘சலக்கு சலக்கு சரிக சேலை’, “சிம்மராசி” ‘கும்பகோணம் சந்தையில் பார்த்த’. அஜித் குமார், பார்த்திபன், தேவயானி நடித்த “நீ வருவாய் என” படத்தில் வரும் ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’, பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘சேது’வில் வரும் ‘சிக்காத சிட்டொன்னு கையில் வந்தா’ பாடலும் இவர் பாடியதே.

இளையராஜா இசையில் நடிகர் செல்வா நடித்து ‘சூப்பர் ஹிட்’ ஆன “சக்திவேல்” படத்தில் வரும் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ பாடலும் இவரது மயக்கும் குரலில் வந்த பாடலே.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!