---Advertisement---

சீக்கிரம் முடிச்சிருங்க அடுத்து நா வர முடியுமான்னு தெரியாது….சுந்தர்.சி.யை தலை சுற்ற வைத்த அஜீத்?…

Published on: May 18, 2024
---Advertisement---

“அரண்மனை-4” படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் சுந்தர்.சி. தனது படங்களின் மூலம் ரசிகப்பெருமக்களை எப்படியெல்லாம் கவர்ந்திழுக்க முடியும் என்ற வித்தையை நன்கு அறிந்து வைத்திருப்பவர் அவர். தமிழ் முன்னனிகளுடன் கைகோர்த்து வந்த இவர். அஜீத் உடனான தனது அனுபவத்தை சொல்லியிருக்கிறார்.

‘மாஸ்’ ஹீரோவாக அஜீத் உருவாகும் முன்னரே இருவரும் இணைந்திருப்பார்கள். “உன்னைத்தேடி” படத்தினுடைய பாடலை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருக்க அஜீத் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்து போனாறாம் அதன் இயக்குனர் சுந்தர்.சி.

unnaithaedi
unnaithaedi

பாடல் காட்சியை எவ்வளவு சீக்கிரம் படமாக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம்  எடுத்து விடுங்கள் என சொல்ல எதற்கு இவ்வளவு அவசரம் என இயக்குனர் கேட்டிருக்கிறார். அதற்கு அஜீத்தோ தனக்கு அறுவை சிகீட்சை செய்ய வேண்டியதுள்ளதால் அங்கே  செல்ல நேரிடும் என்றிருக்கிறார், சுந்தரோ பரவாயில்லை உங்களது சிகீட்சைக்கு பிறகு நாம் பார்த்துக்கொள்ளலாமே என சொல்லியிருக்கிறார்.

அப்போது அஜீத் இல்லை இந்த ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்தால் நான் வாழ்நாள் முழுவதும் படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் வர நேரிடலாம்,  அதனால் நீங்கள் பாதிப்படைந்து விடக்கூடாது எனவே தான் இந்த வேகம் காட்ட  சொல்லிகிறேன் என்றிருக்கிறார். இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றுவிட்டாராம் சுந்தர்.சி.

இப்படி தனக்கு வந்திருந்த  தர்ம சங்கடமான நிலையில் கூட தன்னால் பிறருக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என நினைக்கும் குணம் தான் அவரின் மிகப்பெரிய பலம் என்று சுந்தர்.சி. சொல்லியிருந்தார். அதோடு எதையும் சந்திக்கும் அஜீத்தின் போராட்ட குணமும் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது என்பதையும் சேர்த்திருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க