---Advertisement---

அஜித்தின் அடுத்த பட நாயகி இவர் தானா?…அதெல்லாம் இருக்கட்டும் விடாமுயற்சி என்னாச்சுப்பா?…

Published on: April 27, 2024
good bad ugly
---Advertisement---

கடந்த மே மாதம் பெயர் வெளியிடப்பட்டு அதன் பிறகு படத்தை பற்றி எந்த தகவலும் இல்லாமல் கப்-சிப் என மௌனம் காத்து வருகிறது “விடாமுயற்சி”படக்குழு.

மகிழ்திருமேனியுடன் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போவதாக ஒரு பக்கம், படப்பிடிப்பு நடத்தபட்ட அஜர்பைஜான் நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலை காரணத்தினால் தள்ளிபோகிறது.

தயாரிப்பாளர் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என இப்படி வாயில் வடை சுடும் காரணங்கள் மட்டுமே தான் சொல்லப்படுகிறதே தவிர ‘அப்டேட்’ பற்றி கேட்டால் காதுக்குள்ளே வெறும் காத்து மட்டும் தான் வருது என அஜீத் ரசிகர்கள் வருத்தப்படும் நிலையைத்தான் கொடுத்து வருகிறதாம் ‘விடாமுயற்சி” படக்குழு.

இந்த கேப்பில் அஜீத்குமார், ஆத்விக் ரவிச்சந்திரன் இணையப்போகும் படத்தின் ‘அப்டேட்’ திடீரென வெளியிடப்பட்டது. “குட்,பேட்,அக்லி” என பெயர் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

தேவிஸ்ரீபிரசாத் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். “வீரம்” படத்திற்கு பிறகு அஜீத்துடன் இணைகிறார் இவர். கதாநாயகி யார்? என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

sreelela ajith
sreelela ajith

இதனை பற்றிய தகவலை சொல்லியுள்ளார் ‘வலைப்பேச்சு’அந்தணன். அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஸ்ரீலீலா, அஜீத் படத்தில் இணைய உள்ளதாக பேசியுள்ளார். “குண்டூர் காரம்” படத்தில் நடித்து டோலிவுட்டை கிறங்கடித்தவர்.

தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாநாயகிகளுடன் மட்டுமே ஜோடி சேர்வது என  கொள்கை வைத்திருக்கும் அஜீத், தன்னை விட வயதில் மிகவும் இளையவரான ஸ்ரீலீலாவை எப்படி ஜோடியாக்குவார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கதாநாயகியாக நடிக்க போகிறாரா? அல்லது ரஜினியின் அடுத்த படத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கயிருப்பது போல வேறு ஏதும் கதாபாத்திரம் வழங்கப்படுமா?  என குழப்பியும் விட்டிருக்கிறார் அஜீத் ரசிகர்களை அந்தணன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!