சில நாட்களாக திமுகவினரின் தொழில் நுட்ப குழு தயாரித்த ஸ்டாலின் தான் வாராறு என்ற பாடல் சமூக வலைதளங்களில் பிரபலமாகிறது அந்த வாசகத்தை ஒட்டிய பேனரும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது.
இந்த வாசகம் அடங்கிய பேனரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள், பஸ் ஸ்டாண்டுகள் என பல இடங்களில் பார்க்க முடிகிறது.
இந்த விளம்பரங்களை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் திடீரென கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விளம்பரம் தொடர்பான உண்மை தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர் தான் பொறுப்பாக வேண்டும்” என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.













