---Advertisement---

ரஜினி கட்சி குறித்து ஸ்டாலின்

Published on: December 20, 2020
---Advertisement---

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கப்படுகிறது. திமுகவை தோற்கடிக்க கடும் முயற்சி நடந்து வருகிறது, முக்கியமான காலக்கட்டத்தில் இக்கூட்டத்தை நாம் கூட்டி இருக்கிறோம் .

வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் துவங்குகிறார் என அறிவிக்கப்பட்டது.

அர்ச்சுனனின் குறி போல திமுக குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசினார்.

இக்கூட்டத்தில் பேசிய
பொதுச்செயலாளர் துரைமுருகன் டிசம்பர் 23ம் தேதியில் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்த பிரசாரத்தின்போது 16,000 கிராமசபை கூட்டங்களையும் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.