---Advertisement---

காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது… பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு..!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

தமிழகத்தில் பிளஸ் டூ, பிளஸ் ஒன் வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேர்வானது நாளையுடன் முடிவடைய உள்ளன. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் வருகிற 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறையை 6-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. இதையடுத்து காலாண்டு விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் போது பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.  28ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது பள்ளி திறப்புக்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு வழங்கியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!