---Advertisement---

நடிகர் சங்கம் கட்டிடம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி…!

By Sri
Published on: September 9, 2024
---Advertisement---

நடிகர் சங்க கட்டிடத்திற்காக கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை ஏற்பாடு செய்து கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவரான நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாளர் கார்த்திக், செயலாளர் நடிகர் விஷால், துணைத்தலைவர்கள் பூச்சி முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அளித்து வரும் ஆதரவுக்காக நடிகர் சங்க பொது குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

நடிகர் சங்க கட்டிடம் 25 கோடி ரூபாய் வங்கி கடன் மூலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கு தேவையான 12 கோடி வங்கி கடன் டெபாசிட் தொகைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கி இருக்கின்றார். இதையடுத்து நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதில் பேசிய நடிகர் சங்க நிர்வாகிகள் கட்டிடத்திற்கு கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெருமளவு தொகையை கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி பேசி இருந்தார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Exclusive Leak: Prabhas to Play a Fierce Cop with a Heart in Spirit!

மேலும் தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டத்தில் அமைச்சர் பெருமக்களும் குறிப்பாக வங்கி வைப்பு தொகைக்காக பெரும் நிதி திரட்ட ஏற்பாடு செய்தமைக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!