---Advertisement---

ஒரே கடையில் முடிவெட்டிய 6 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

By Sri
Published on: April 27, 2020
---Advertisement---

கொரோனா நோயாளிக்குப் பின் முடிவெட்டிய 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 25,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தினமும் கண்டுபிடிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் முடி வெட்டிய 6 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இதுகுறித்து நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்பு இருந்த ஒருவர் சலூன் கடைக்கு வந்ததாகவும், அதனை அடுத்து அவருக்கு பயன்படுத்திய கத்தரி மற்றும் சலூன் சாதனங்ன்களை மற்றவர்களுக்கும் பயன்படுத்தியதால் கொரோனா பரவும் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . அந்த 6 பேரையும் போலிஸார் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் சலூன் கடை வைத்திருப்பவர்களிடம்  ஒவ்வொரு முறையும் முடி வெட்டுதல் அல்லது ஷேவிங் செய்தபின் கிருமிநாசினி கொண்டு சலூன் கருவிகளை சுத்தம் செய்துவிட்டு அதன்பின் அடுத்தவருக்கு முடி வெட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!