த்ரிஷா நடித்த விவெல் சோப் விளம்பரம் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் துணை நடிகராக நடித்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர். ஆனால் அவர் கடந்து வந்த பாதை மிகவும் நீளமானது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர், தொகுப்பாளர், சினிமாவில் துணை நடிகர், பின்னர் கதாநாயகன் அதன் பின்னர் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. த்ரிஷா பல ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த விவெல் சோப் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் ஒரு துணை நடிகராக தோன்றியுள்ளார்.
அந்த புகைப்படத்தை இப்போது பகிர்ந்து அவரது வளர்ச்சியைப் புகழ்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.