மதுரையில் வருடா வருடம் நடக்கும் பெரும் நிகழ்வு சித்திரை திருவிழா. சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு பெரும் விழாக்களாக இந்த விழா நடைபெறும்.
போன வருடம் கொரொனா பரவலால் சித்திரை திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த வருடமும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலால் மீண்டும் சித்திரை திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்பு கோவிலுக்குள்ளே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறலாம் என சிறிய தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மதுரையில் சித்திரை திருவிழா இந்த வருடம் நடந்தே ஆக வேண்டும் என பக்தர்கள் மதுரை தமுக்கம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.













