---Advertisement---

Selvaraghavan 7G2 Logic : செத்துப்போன ஹீரோயின்.. அப்புறம் எப்படி பார்ட் 2? செல்வா கொடுத்த மாஸ் பதில்!

By Sri
Published on: April 6, 2026
Director Selvaraghavan explaining the sequel logic for 7G Rainbow Colony 2 starring Ravi Krishna.
---Advertisement---

இயக்குநர் செல்வராகவன் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரை தான். இப்போது அவர் தனது எவர்கிரீன் ஹிட் படமான ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். பொதுவாகவே ஒரு படம் ஹிட் அடித்தால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது வழக்கம். ஆனால் கிளைமாக்ஸிலேயே ஹீரோயின் இறந்துபோன ஒரு படத்திற்கு எப்படி பார்ட் 2 சாத்தியம் என்கிற கேள்வி எல்லோரிடமும் இருந்தது. அதற்கு செல்வா இப்போது ஒரு தரமான விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி சோழர்களுடன் நடந்து போவது போல முடித்திருப்போம், அதனால் பார்ட் 2 எடுப்பது ரொம்ப சுலபம். அதே மாதிரி புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் உயிரோடு தான் இருக்கிறான், அதனால் அங்கிருந்து கதையை ஈஸியாக நகர்த்தலாம். ஆனால் 7ஜி ரெயின்போ காலனி அப்படி கிடையாது. ஹீரோயின் அனிதா இறந்துவிடுகிறாள், ஹீரோ கதிர் அவளுடைய நினைவுகளோடு தான் வாழ்கிறான். இதில் எப்படி அடுத்த பாகம் வரும் என்று பலரும் கேட்டனர்.

A combined visual of Aayirathil Oruvan and Pudhupettai posters highlighting Selvaraghavan's direction.
ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரஸ்யமான ஒப்பீடு.

 

தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு மிரட்டலான ஐடியாவை பிடித்துக்கொண்டு தான் இந்த 7ஜி 2 படத்தை எடுக்க முடிவெடுத்ததாக செல்வா கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் 'LK Akshay Kumar 03' பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஹீரோயின் இறந்த பிறகு கதிரின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும், 20 வருடங்களுக்கு பிறகு அவன் அதே நினைவுகளில் இருக்கிறானா அல்லது முன்னேறி விட்டானா என்கிற அந்த ஒரு ‘ஸ்பார்க்’ தான் இந்த இரண்டாம் பாகத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Side-by-side comparison of Ravi Krishna in 7G Rainbow Colony and his return in 7G2 sequel.
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதிராக ரவி கிருஷ்ணா – 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 1 மற்றும் பார்ட் 2 ஒப்பீடு.

 

இந்த ரகசியத்தை செல்வராகவன் உடைத்ததுமே இப்போது 7ஜி 2 மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரவி கிருஷ்ணா மீண்டும் கதிராக நடிக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழைய நினைவுகளையும் தற்போதைய எதார்த்தத்தையும் இணைக்கும் ஒரு மேஜிக் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வா – யுவன் கூட்டணி இணைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய வைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!