---Advertisement---

Anirudh’s Hidden Heart : அனிருத் கொடுத்த ‘2 லட்சம்’ – ஆர்ஜே பாலாஜி பகிர்ந்த நெகிழ்ச்சியான உண்மை!

By Sri
Published on: April 8, 2026
Anirudh Ravichander and RJ Balaji together on stage sharing a laugh at the Love Insurance Kompany movie launch event.
---Advertisement---

கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆர்ஜே பாலாஜி இடையேயான நட்பு பல ஆண்டுகால பழமையானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தில் இடம்பெற்றுள்ள ‘எனக்கென’ பாடல் உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பாதியில் நின்ற ‘ஆக்கோ’ படத்திற்காக உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் அனிருத் தான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆர்ஜே பாலாஜிக்கும் இரண்டு லட்ச ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை வைத்துத் தனது மகனின் பிறந்தநாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடியுள்ளார் பாலாஜி. ஆனால் திடீரென பத்து நாட்கள் கழித்து அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என அனிருத் தெரிவித்துள்ளார். இதனால் தான் வாங்கிய பணத்தைத் தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்கப் பாலாஜி முயன்றுள்ளார்.

இந்தச் சூழலில் அனிருத் செய்த ஒரு காரியம் தான் ஆர்ஜே பாலாஜியை இன்றும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RJ Balaji and Music Director Anirudh Ravichander sharing a light moment during an event.
அனிருத் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் நீண்டகால நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்.

 

பாலாஜி தயாரிப்பாளரை அழைத்துப் பணத்தைத் தருவதாகக் கூறியபோது, அனிருத் ஏற்கனவே அந்தத் தொகையைத் தனது சொந்தப் பணத்திலிருந்து செட்டில் செய்துவிட்டதாகத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அந்தப் பணத்தைப் பாலாஜியின் மகனுக்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசாகக் கருதும்படி அனிருத் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத்தின் இந்தத் பெருந்தன்மையான குணத்தைப் பாலாஜி தற்போது எல்.ஐ.கே புரமோஷனில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Jana Nayagan Leak : "அந்த பயன் போனை தட்டிவிட்டேன்" – மதுரையில் விஜய்யின் ஜன நாயகன் படத்தை பார்த்தவரை தடுத்த விக்னேஷ் சிவன்!

தற்போது ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள எல்.ஐ.கே படத்தில் அனிருத்தின் இசையில் ‘எனக்கென’ பாடல் மீண்டும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பழைய நினைவுகளைத் தூண்டியுள்ளது. “ஒயி திஸ் கோலிவெரி டி” (why this kolaveri d) பாடல் காலத்தில் இருந்தே இவர்களின் நட்பு மிகவும் உறுதியானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. படப்பிடிப்பு நின்றாலும் தனது நண்பன் கஷ்டப்படக் கூடாது என்பதில் அனிருத் காட்டிய அக்கறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் அனிருத் ஜொலிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?