இன்று நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்த தினம் ஆகும். ரஜினி வரும் டிசம்பர் 30ல் அரசியல் பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதால் இந்த ஆண்டு அவரின் பிறந்த நாளை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி வேடமணிந்த சில ரசிகர்கள் அவர் வீட்டு முன் திரண்டனர்.அவரை பார்க்க விரும்பினர். கொரோனா சூழலில் ரசிகர்கள் யாரையும் சந்திக்க விரும்பாத ரஜினி நேற்றிரவே வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.







