---Advertisement---

ரஜினி நடிக்க வந்து 46 வருடம்

Published on: August 9, 2021
---Advertisement---

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக உச்ச நட்சத்திரமாக உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 வருடத்துக்கும் மேலாக கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்றும் இவரின் படங்களுக்கு மிகப்பெரும் அளவில் மாஸ் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போதும் கூட அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். கடந்த 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவரை அறிமுகப்படுத்தினார்.

இப்படம் ஆகஸ்ட் 15 அன்று 1975ம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்த் நடிக்க வந்து இத்தோடு 46 வருடங்களாகி விட்டதாம். 46 வது வருடத்தில் ரஜினிகாந்த் உள்ளார். இன்னும் நான்கு வருடங்களில் ரஜினிகாந்த் நடிக்க வந்து பொன்விழா கொண்டாட வேண்டிய ஆண்டு நெருங்கி விடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.