---Advertisement---

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 1, 2024
---Advertisement---

தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

தமிழகத்தில் தொடர்ந்து மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் வரும் ஏழாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடந்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் வலுவான தரைக்காற்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். நாளை முதல் வரும் ஏழாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது” என்று தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!