---Advertisement---

மின்கட்டணம் குறைப்பு… வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம்… அதிரடி அறிவிப்பு…!

By Sri
Published on: September 3, 2024
---Advertisement---

புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “புதுச்சேரி மின் சட்டம் 2003 பிரிவு 55 விதிகள் படி வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21 முதல் 300 யூனிட் வரை ரூபாய் 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் 7.50 என்ற கட்டணம் அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் நுகர்வோர்களுக்கு 50% வரை அரசு மானியம் தொடரும்.

அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் 300 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டு இருக்கும் 7.50 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 9.65 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. 400 யூனிட்டுக்கு மேல் சென்றால் 10.75 ரூபாயும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால் 11.90 ரூபாயும் கட்டணமாக வரிசையில் செய்யப்படுகின்றது.

இதை ஒப்பிடுகையில் புதுச்சேரிகளில் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் குறைவாகவே இருக்கின்றது. மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கை தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணக்குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கூட்டணி கட்சியினர் மின்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!