சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் ராமலிங்கம். கடந்த தீபாவளிக்கு மறுநாள் அன்று ராமலிங்கம் மருந்து வாங்கி கொண்டு தி நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து வந்துள்ளார்.
அப்போது அவரிடம் வேண்டுமென்றே இரண்டு இளைஞர்கள் வம்பு இழுத்துள்ளனர் அவரை வந்து இடித்துள்ளனர். பார்த்து போங்கப்பா என அமைதியாக கூறிய காவல்துறை அதிகாரி மிகவும் பொறுமையாக இருந்துள்ளார். எல்லை மீறிய இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் உங்கள் கூகுள் பே நம்பருக்கு 500 ரூபாய் அனுப்பியுள்ளனர் அதை எடுத்து தரும்படி மிரட்டியுள்ளனர். பொறுமையாக இருந்து பார்த்த அதிகாரி ஒரு கட்டத்தில் மாம்பழம் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
போலீஸ் வந்த உடன் பயந்து போன இளைஞர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரித்துள்ளது. பின்னர் தங்கள் பாணியில் கவனித்துள்ளது.
பின்பு இது போல எல்லாம் செய்யக்கூடாது என புத்திமதி கூறி அவர்களை காவல்துறை அனுப்பி வைத்துள்ளனர்.







