---Advertisement---

ரீல்ஸ் மோகம்… வீலிங் செய்த இளைஞரின் பைக்கை பாலத்திலிருந்து கீழே வீசிய மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: August 18, 2024
---Advertisement---

இன்றைய இளைஞர்களின் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு ரீல்ஸ் எடுத்து அதனை வீடியோவில் பதிவிட்டு அதிக லைக்களை வாங்குவதை ஒரு குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் அஜாக்கிரதையாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்து வகையிலும் வாகனங்களை ஓட்டி ரிலீஸ் செய்து கொண்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் இளைஞர்களின் பைக்குகளை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கோவமான மக்கள் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயரத்திலிருந்து கீழே தூக்கி வீசினார்கள். உடனடியாக அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க