---Advertisement---

ஓலா ஷோரூம் முன்பு… மின்சார ஸ்கூட்டருக்கு ஒப்பாரி வைத்து இறுதி சடங்கு… வாடிக்கையாளர் செய்த வினோத சம்பவம்..!

By Sri
Published on: August 20, 2024
---Advertisement---

ஓலா ஷோரூம் தன்னுடைய ஓலா மின்சார ஸ்கூட்டரை வைத்து அதற்கு மைக்கில் ஒப்பாரி பாடி இறுதி சடங்கு செய்த வீடியோவானது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற நபர் அந்த மின்சார ஸ்கூட்டரை வாங்கி இருக்கின்றார். ஆனால் அது அடிக்கடி பழுதாகி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியில் இருந்த அவர் தள்ளுவண்டியில் தனது மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு நேராக ola ஷோரூமுக்கு சென்று இருக்கின்றார். ஷோரூம் முன்னாள் நின்று கொண்டு மைக்கில் தனது சோக பாடல்களை பாடத் தொடங்கி இருக்கின்றார்.

இதனால் அங்கு இருந்த மக்கள் அவரை சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.  சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோக பாடலான ஹிந்தியில் வரும் Hum Dil De Chuke Sanam பாடலை மிக சோகமான குரலில் ஓலோ ஸ்கூட்டரை நோக்கி பாடியது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருந்தது.

ஏங்கும் இந்த இதயத்தில் இருந்து பெருமூச்சு வெளியேறுகின்றது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது என்று பொருள்படும்படி அந்த பாடலை பாடியது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மின்சார வாகனங்கள் பழுதுபடுவதும்,  திடீரென்று வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓலா நிறுவனத்தின் வாகனங்கள் வாங்கிய சில நாட்களிலேயே பழுதடைவது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

https://twitter.com/DhanValue/status/1825476881858113889

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க