national
ரயில்களில் குறைந்த அளவில் முன்பதிவில்லா பெட்டிகள்… வேதனை தெரிவிக்கும் பயணிகள்…!
ஏழை எளிய மக்களும், வட மாநில தொழிலாளர்களும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு ஏறி செல்லும் முக்கிய பேருந்து சாதனம் ரயில்வே துறை. வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரயில்களில் முன்பை விட தற்போது பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கின்றது. தென் மாநிலங்களுக்கு வரும் வட மாநிலத்தினர் நரக வேதனை அனுபவித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது இந்த ரயிலில் பொதுப் பெட்டிகள் குறைவாக மட்டுமே இருந்தது. பொதுப் பெட்டியில் பயணிகள் நுழைய முடியாத அளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அதிக அளவில் இருக்கிறார்கள் . ஏறும்போதே கூட்ட நெரிசலில் சண்டை ஏற்படுகின்றது.
மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் எழுந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் தரையிலேயே படுத்து தூங்கினர். இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களின் காலடிகளுக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படியும் பயணம் செய்தார்கள். கால் வைக்க கூட இடமில்லாமல் கால் கடுக்க பலர் பயணம் செய்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் கழிவறைகளிலும் பயணிகள் இருந்தனர். அவர்கள் கழிவறையில் நின்று கொண்டு சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பலரும் பயணம் செய்ய முற்பட்டார்கள். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களை முன் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் ஏறவிடாமல் தடுத்தார்கள். இருப்பினும் சிலர் ஏறியதால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பவர்கள் அவதி அடைந்தார்கள்.
தெற்கு மத்திய ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில்களில் 27 சதவீதம் பேர் ஏசி மற்றும் படுக்கை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். பொதுப் பெட்டியில் 73 சதவீதம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். பொது பேட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த வருவதால் இது போன்ற கஷ்டங்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. இதனால் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சில ரயில்களில் பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.