---Advertisement---

நீ பொட்டு வெச்ச தங்க குடம்… ஐபிஎல் 2025 எம்.எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி…!

By Sri
Published on: September 29, 2024
---Advertisement---

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் எம் எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும் உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் இரண்டு பேரையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION என்ற முறையில் வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலாம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் UNCAPPED வீரராக எம் எஸ் டோனியை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

எம் எஸ் தோனிக்காகவே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகளான நிலையில் UNCAPPED பிளேயராக எம் எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்கலாம் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த விதிமுறை 2021 வரை ஐபிஎல்-ல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!