---Advertisement---

உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை…!

By Sri
Published on: August 16, 2024
---Advertisement---

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இந்த தொற்றானது சுவீடன் நாட்டிலும் உறுதியாகி இருக்கின்றது. அதன் பரவலை ஒட்டி உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்திருக்கின்றது. இதனை ஒட்டி தமிழ்நாடு சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் குரங்கம்மை பாதிப்பு உள்ளவர்கள் என்று யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக அதனை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக காம்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கடந்த 21 நாட்களுக்குள் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறியவும், குரங்கம்மை அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்காக பல ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. யாருக்காவது பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அது குறித்து அவர் பயணித்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க