---Advertisement---

மோகன்லால் நடிக்க த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்

Published on: September 21, 2020
---Advertisement---

மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் கடந்த 2013 டிசம்பரில் வெளிவந்தது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாதலால் இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. ஜீது ஜோசப் இயக்கி இருந்தார்.ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாது தென்னக மொழிகள் அனைத்திலும் ரீமேக்கப்பட்டது.ஹிந்தியிலும் இப்படம் வந்தது ஹிந்தியில் பெரிய வெற்றியை பெறவில்லை.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வந்தது கமல், கவுதமி நடிக்க தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது இப்படம்.

இப்படி மிகப்பெரிய சாதனைகளை செய்த இப்படம் மீண்டும் இரண்டாம் பாகமாக வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே இப்படத்தையும் இயக்குகிறார். த்ரிஷ்யம் பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்  இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜைகள் போடப்பட்டுள்ளது.இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.