ஆப்பிள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களை சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக இருந்ததாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலகங்களை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஏஐ ஆய்வகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும் மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காக அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசி இருக்கின்றார். இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்ததாவது apple google மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களை சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டான்மைகள் பற்றி கலந்துரையாடி இருக்கின்றோம். இந்த கூட்டம் மொழிகளை வலுப்படுத்தி ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த உறுதிப்பூண்டி இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.













