---Advertisement---

நடப்பது நல்லதாக இருக்கட்டும்…சாராயம் குறித்து பேசிய அமைச்சர்…

Published on: June 29, 2024
liquor
---Advertisement---

சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது தினமும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டத்திருத்த  மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அப்போது உழைப்பவர்கள் தங்கள் உடல் அசதிக்காகவே குடிக்கின்றார்கள். அதற்காகவே அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு டாஸ்மாக்களில் விற்கப்படும் மதுபானங்களில் கிக் இல்லை.குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுக்கள் சாஃப்ட் டிரிங்க்ஸ்கள் (Soft Drinks) போல தெரிகிறது இப்போதெல்லாம். ‘கிக்’கிற்காகவே அவர்களுக்கு சாராயம் தேவைப்படுகிறது.

Duraimurugan
Duraimurugan

கள்ளச்சாராய விவகாரத்தில் நடந்தது எல்லாம் நடந்தவைகளாகவே இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்றார். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன அதிகாரிகளை தூக்கில் கூட போட சட்டம் இயற்றலாம். எல்லாத்திற்கும் ஒரு நியாய வேண்டாமா? என சொன்னார்.

கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷனை திறக்கவா முடியும்? என கேள்வி எழுப்பினார். அதே போல மனிதாய் பார்த்து திருந்தா விட்டால் இதை ஒழிக்க முடியாது என்றார்.கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து ஐமப்த்தி ஐந்து பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது சமீபத்தில். இந்த விவகாரம் தொடர்பாக விசாரனை கமிஷனை அமைத்துள்ளது தமிழக அரசு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Jio Star Sets Ambitious ₹6,000 Crore Goal from Cricket Spectacles

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருபது பேரை கைது செய்துள்ளது காவல் துறை. எதிர்கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் தான் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாததில் பேசிய போது தான் துரைமுருகன் இப்படி சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!