---Advertisement---

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா செய்யும் முறை

Published on: March 15, 2022
---Advertisement---

தேவையான பொருட்கள்

பால் 1 கப்

நன்னாரி சிரப் – 3-4 டேபிள்  ஸ்பூன்

பாதாம் பிசின் – 1-2 டேபிள் ஸ்பூன்

சக்கரை – 1/2 கப்

ஐஸ் கிரீம் – 1 கப்

பால்கோவா – 2 டேப்ளேஸ்பூன்

 

எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக   பாதாம் பிசினை ஊற வைக்கணும் . முந்தையநாள் இரவே இதை ஊற வைத்தால் மறுநாள் சேய்ய சரியாக இருக்கும்.  ஊறவைத்ததில் இரண்டு கல்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் இதில் உங்களுக்கு ஒரு கிண்ணம் நிறைய ஜெல்லியை போன்ற பாதாம் பிசின் கிடைக்கும். இதுவே இந்த குளிர்பானத்திற்கு முக்கியமான பொருளாகும். இது இல்லாமல் ஜிகர்தண்டா இல்லை என்றே கூறலாம்!

ஜிகர்தண்டா அதற்கேற்ற சில ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன அதே உபயோகியுங்கள் இல்லாவிட்டால் ஏதேனும் உங்களுக்கு பிடித்த வெனிலா சாக்லேட் ஐஸ்க்ரீம்களை உபயோகிக்கலாம்.

ஒரு லிட்டர் பாலை சிம்மில் (அடுப்பை) வைத்து நன்றாக பாலின் அளவு குறையும் அளவிற்கு மெதுவாக காய்ச்சுக்கொளுங்க. இன்னொரு கிண்ணத்தில் இன்னும் நன்றாக காய்ச்ச ஆடையுடன் இருக்கும் பால் அதாவது பாஸந்தியை போல் உள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக பால்கோவாவையும்  சேர்த்துக்கொள்ளலாம் .

இப்போது தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டது. இதை மேற்கொண்டு ஒரு கிளாஸில் எவ்வாறு சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் பாதாம் பிசினை இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கு மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் பாஸந்தியை போல் ஆடையுடன் இருக்கும் பாலை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதற்கு மேல் நன்றாக காய்ச்சிய பாலை சிறிதளவு ஊற்றி  இதை ஒரு ஸ்பூனால் நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு பெரிய ஸ்கூப் ஐஸ் கிரீமை எடுத்து இதற்கு மேல் வைத்துவிடுங்கள்.

அதன் மேல் நன்னாரி சர்பத்தை சிறிதளவு ஊற்றி விட்டாள் உங்களுக்குத் தேவையான ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்!

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க