---Advertisement---

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னையில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 5, 2024
---Advertisement---

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து விசாகப்பட்டினம் அருகே கரையே கடைந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் இரண்டு மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடலோர ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள வட மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளது. இது வடமேற்கு திசையில் அடுத்து 2 நாட்களுக்கு நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இது வடக்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!