---Advertisement---

குறைந்து வரும் y குரோமோசோம்கள்… வரும் காலத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காதா…? ஆய்வில் அதிர்ச்சி…!

By Sri
Published on: August 28, 2024
---Advertisement---

மனிதர்களை ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தீர்மானிப்பது குரோமோசோம். பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் என்ற குரோமோசோம்களும், ஆண்களுக்கு எக்ஸ் ஒய் என்கின்ற குரோமோசோம்களும் இருக்கும். ஆண் தன்மையை தீர்மானிக்கும் ஒய் குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக ஆய்வு தகவல் வெளியாகி இருக்கின்றது.

எக்ஸ் குரோமோசோம்னு ஒய் குரோமோசோம்களுடன் சேரும்போது தான் ஆண் குழந்தை பிறக்கின்றது. ஆனால் வரும் காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம் என்று கூறப்படுகின்றது .தொடக்கத்தில் மனிதனில் உள்ள ஒய் குரோமோசோம்களில் 1438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1393 மரபணுக்கள் அழிந்துவிட்டது.

தற்போது ஒய் க்ரோமோசோம்களில் 40 மரமணுக்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்து வந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்து இருக்கிறார்கள்.

அதாவது ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது அவற்றில் ஒய் குரோமோசோம் முற்றிலும் அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமிக்கின்றது. எனவே மனிதர்களிடம் ஒய் குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும்போது புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என தெரிவித்து இருக்கின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Pralaya Shesham Oru Jala Kanyaka: First Look Revealed

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க