மார்கழி மாதம் வந்துவிட்டாலே கடும் குளிர்தான் . அனலாக கொதித்த இடங்களில் மாலை 6மணிக்கெல்லாம் பனி பெய்ய ஆரம்பித்து விடுகிறது. காலநிலையால் ஏற்படும் கடும் குளிர் ஹாட் சிட்டிகளையே வாட்டி வருகிறது.
அப்படி இருக்கையில் மலைகளின் இளவரசியான எப்போதுமே குளு குளுவென இருக்கும் கொடைக்கானலை விட்டு விடுமா? கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் உறைபனி பெய்து வருகிறது.
இதனால் முதியவர்கள் வீட்டுக்குள் உள்ளனர்.குளிருக்கு அணியும் எந்த உடை அணிந்தாலும் பனியால் ஏற்பட்ட இந்த குளிர் கட்டுப்படுவதில்லை.
கொடைக்கானல் ஏரி மற்றும் மலைப்பகுதிகளில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் உறைபனி படர்ந்துள்ளது.
பனிப்போர்வை போர்த்திய கொடைக்கானலை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.













