நேற்று நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஆகும். நடிகர் கமல் எப்பொழுதோ தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிவிட்டார். இந்நிலையில் கமல் பிறந்த நாளை முன்னிட்டும் மேலும் மழை வெள்ளத்தில் மக்கள் உணவில்லாமல் வருந்துவதாலும் கமல் ரசிகர்கள் ஐயமிட்டு உண் என்ற பெயரில் உணவு தானம் செய்து வருகின்றனர்.
இந்த சேவையை கமல் ரசிகர்கள் நேற்று முதல் செய்து வருகின்றனர்.








