---Advertisement---

விபத்து நடந்தது பற்றி நடித்துக் காட்டுங்கள் – கமலை துன்புறுத்தும் விசாரணை அதிகாரிகள்!

By Sri
Published on: March 17, 2020
---Advertisement---

இந்தியன் 2 விபத்து பற்றி விசாரணை நடத்தும் அதிகாரிகள் தன்னை நடித்துக் காட்டும்படி துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி பூந்தமல்லியில் நடந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இது சம்மந்தமாக கமல் ஆஜராகி மூன்று மணிநேரத்துக்கும் விளக்கமளித்தார். ஆனால் விசாரணை நடத்தப்பட்ட விதத்தில் கமலுக்கு ஆட்சேபணை இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், விபத்து குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்த நீதிமன்றம் கமல் விசாரணைக்கு ஆஜராகத் தேவையில்லை எனக் கூறியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.