தமிழ் சினிமாவில் தடம் பதித்து நகைச்சுவையில் பெரும் முத்திரை பதித்த நடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று, இது குறித்து நாகேசுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகரும் அரசியல்வாதியும் மக்கள் நீதி மய்ய நிறுவனருமான கமல் கூறி இருப்பதாவது
நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என கமல் கூறியுள்ளார்.









