லிட்டில் மாஸ்டர் சச்சினை விட ரோஹித் ஷர்மா சிறந்த ஒருநாள் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் என முன்னாள் வீரர் சைம்ன் டௌல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கிரிக்கெட் உலகின் சிறந்த ஒரு நாள் தொடக்க ஆட்டக்காரர் என்றால் அது கண்டிப்பாக ரோஹித் ஷர்மா என சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம். இதுவரை 3 முறை இரட்டைச்சதம் அடித்துள்ள அவர் மற்ற பேட்ஸ்மேன்களால் தொட முடியாத இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இவரை முன்னாள் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினோடு ஒப்பிட்டு முன்னாள் வீரர் சைமன் டௌல் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார். ஆனால்,ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள் கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்’ என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த கருத்தை ஏற்க மறுத்துள்ளனர்.













