---Advertisement---

மிரட்டிய ஜமிந்தா வாஸ்… சச்சின் & சேவாக் சொதப்பினாலும் வெற்றி பெற்ற இந்தியன் லெஜண்ட்ஸ் !

By Sri
Published on: March 11, 2020
---Advertisement---

சாலை விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடும் தொடரில் இந்திய அணி இலங்கையை வெற்றிப் பெற்றுள்ளது.

மும்பையின் சாலைவிழிப்புணர்வுக்கான உலக முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடும் டி 20 தொடர் மும்பையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியை வென்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் முனாப் படேலின் அபாரமான பந்துவீச்சால் 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முனாப் படேல் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். அதையடுத்து 139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணியில் சச்சின், சேவாக், மற்றும் யுவ்ராஜ் ஆகிய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய கைப் 46 ரன்களில் அவுட் ஆக இந்தியாவின் வெற்றி எட்டாக்கனியாக ஆனது. ஆனால் அதன் பின்னர் இர்பான் பதான் அதிரடியில் பதான் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட வெற்றி மீண்டும் கைவசமானது. அவர் 31 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.