---Advertisement---

தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும்… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

தமிழகத்தில் வரும் நாட்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஒரு சில பகுதிகளில் வெப்பம் உயர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு விழா அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

வரும் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அதாவது இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்.

அதிகம் வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசோகியம் சில இடங்களில் ஏற்படலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!